கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் தெலுங்கானாவில் கொரோனா ஊரடங்கு நாளையிலிருந்து முடிவுக்கு வருகிறது.
கொரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்ற அனைத்து துறைகளுக்கும் தெலுங்கானா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
"ஊரடங்கை முழுவதுமாக நீக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மற்றும் கொரோனா நேர்மறை சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் கொரோனா முழு கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது என்று மருத்துவ அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் அடிப்படையில் ஊரடங்கை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று தெலுங்கானா முதல்வர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.