'என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்' - தெலுங்கானா அமைச்சர் பதிலடி

'என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்' - தெலுங்கானா அமைச்சர் பதிலடி
'என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்' - தெலுங்கானா அமைச்சர்  பதிலடி
Published on

''என்ன மொழி பேச வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்'' எனக் கூறியுள்ளார் தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்.

இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும்  என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அமித் ஷாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து #stophindiimposition என்று பலரும் ட்விட்டரில் டிரெண்ட் செய்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவுச் செய்தி வருகின்றனர். அந்த வகையில் அமித் ஷாவின் பேச்சுக்கு தெலுங்கானா அமைச்சரும், டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவருமான கேடி ராமா ராவ் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க: இந்தி மொழி சர்ச்சை - பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்காட்டி ஏ.ஆர்.ரகுமான் கருத்து

இதுதொடர்பாக கே.டி.ராமாராவ் தனது  ட்விட்டர் பதிவில், “மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங். நான் முதலில் இந்தியன். அடுத்து, பெருமைக்குரிய தெலுங்கானாவைச் சேர்ந்தவன். எனது தாய்மொழியான தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மற்றும் கொஞ்சம் உருது மொழியிலும் என்னால் பேச முடியும். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். பல மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. என்ன மொழி பேச வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். இந்தியைத் திணிப்பதும் ஆங்கிலத்திற்கு அவமரியாதை செய்வதும், உலகளாவிய ஆசைகளைக் கொண்ட இந்நாட்டின் இளைஞர்களுக்குப் பெரும் அவமானமாக இருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: "ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தியை ஏற்றாலும் தமிழர்கள் எதிர்த்து நிற்போம்" - சீமான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com