கொண்டா சுரேகா
கொண்டா சுரேகாஎக்ஸ் தளம்

சமந்தா மணமுறிவு விவகாரம்| ”அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன்; ஆனால்..“- தெலங்கானா அமைச்சர்

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து தொடர்பாக அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
Published on

பிரபல முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த நிலையில், தெலங்கானா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா தற்போது அளித்த பேட்டியொன்றி, ”சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) செயல் தலைவருமான கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜூனா, கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர், “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை, உங்கள் எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதிக்கவும். ஒரு பெண்ணாக பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், எங்கள் குடும்பத்திற்கு எதிராக சொன்ன கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று காட்டமாக தெரிவித்தார்.

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், “விவாகரத்து என்பது ஒருவர் வாழ்கையில் எடுக்கப்பட்ட மிகவும் வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான முடிவுகளில் ஒன்றாகும். பல யோசனைகளுக்குப் பிறகு, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்ல ஒரு பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது. இது எங்கள் வெவ்வேறு வாழ்க்கை இலக்குகளின் காரணமாக, மரியாதையுடனும் கண்ணியத்துடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அமைதியுடன் எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும், இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் கேலிக்குரிய கிசுகிசுக்கள் இதுவரை வந்துள்ளன. இன்று, அமைச்சர் கோண்டா சுரேகாவின் கூற்று பொய்யானது மட்டுமல்ல, அது முற்றிலும் கேலிக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள், ஆதரவு மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவரது மனைவியும் நடிகையுமான அமலாவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டேக் செய்து இதுகுறித்து கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிக்க: இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!

கொண்டா சுரேகா
“என் பயணத்தை சிறுமைப்படுத்தாதீர்கள்” - அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு சமந்தா காட்டமான அறிக்கை!

அதேபோல் சமந்தாவும் கண்டித்திருந்தார். அவர், ”தயவுசெய்து இதை சிறுமைப்படுத்தாதீர்கள். அமைச்சராக நீங்கள் கூறிய வார்த்தைகளின் கனம் பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மரியாதையாகவும் பொறுப்புடனும் அணுக வேண்டுமென கெஞ்சிக் கேட்கிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம். எங்களது விவாகரத்து இருவரும் சம்மதத்துடன் இணைந்து எடுத்த முடிவு. இதில் எந்த அரசியலும் இல்லை. உங்களது அரசியல் சண்டையில் எனது பெயரை சேர்க்காதீர்கள். நான் எப்போதும் அரசியலற்றவர். அதிலேயே தொடரவும் விரும்புகிறேன்" என இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு கே.டி.ராமா ராவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுதொடர்பான அந்த நோட்டீஸில், ”சுரேகா தனது பெயரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய அறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சுரேகா தனது பெயரை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார். கொண்டா சுரேகா ஓர் அமைச்சர். அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சமந்தாவையும், KTRஐயும் தொடர்புபடுத்தி பேசியது தொடர்பாக தெலங்கானா அமைச்சர் கொண்ட சுரேக்கா விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “KTR பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை. அவரால் நிறைய இன்னல்கள்களுக்கு ஆளாகியிருக்கேன். அவரைக் குறித்துப் பேசும்போது வேறொரு குடும்பத்தைப் பற்றியும் எதிர்பாராமல் பேசிவிட்டேன். அதுகுறித்து பலரும் ட்விட் செய்திருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

அதனால் நேற்றே அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன். ஆனாலும் , KTRக்கு பெண்கள் மீது தரம் தாழ்ந்த பார்வை இருப்பது உண்மைதான். இதில் அவர் என்னை மன்னிப்பு கேட்க சொல்வது வியப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சமந்தா மணமுறிவு விவகாரம் தொடர்பான கருத்தை அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாக இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

கொண்டா சுரேகா
மலையாள சினிமா|புயலைக் கிளப்பும் பாலியல் புகார்கள்.. தெலுங்கு நடிகைகளுக்கும் பாதிப்பு.. சமந்தா பதிவு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com