சவுதியில் கத்தி வைத்திருந்ததாக கூறி இந்தியர் கைது - இந்திய அரசு உதவ மனைவி கோரிக்கை

சவுதியில் கத்தி வைத்திருந்ததாக கூறி இந்தியர் கைது - இந்திய அரசு உதவ மனைவி கோரிக்கை
சவுதியில் கத்தி வைத்திருந்ததாக கூறி இந்தியர் கைது - இந்திய அரசு உதவ மனைவி கோரிக்கை
Published on

சவுதி அரேபியாவில் வாகனத்தில் கத்தி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்தியரை, சிறையில் இருந்து விடுவிக்க இந்திய அரசு உதவ வேண்டுமென அவரது மனைவி  கோரிக்கை வைத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் கொசுனூருப்பள்ளே கிராமத்தைச் சேர்ந்தவர் ஏனம் வேணுகோபால். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். கடந்த 5 வருடமாக அங்கு தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர், கடந்த மே மாதம் சிறைக்கு அருகே இருக்கும் இடத்தை சுத்தப்படுத்த வாகனத்தில் வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்களுடன் சென்றதாகத் தெரிகிறது.

அப்போது சிறையின் பாதுகாப்பிற்காக நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் சென்ற வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அந்தச் சோதனையில் வாகனத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கத்திகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து வாகன ஓட்டுனர், வாகனத்தில் இருந்த ஏனம் வேணுகோபால், மற்றொரு தொழிலாளி ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களை மெக்கா சிறையில் அடைத்தனர்.

இதில் வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளி விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனம் வேணுகோபால் மட்டும் விடுவிக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரது மனைவி சரிதா கணவர் வேணு கோபாலை சிறையில் இருந்து விடுவிக்க தெலங்கானா மற்றும் இந்திய அரசு உதவ வேண்டுமென கூறி பதாகை ஏந்தி உதவி கோரிக்கை விடுத்துள்ளார். அவருடன் பிரவாசி மிதா தொழிலாளர் சங்கம் சார்பாக ஒருவரும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com