கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கை மே29 வரை தெலங்கானா அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், அடுத்து 19 நாட்கள் என ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனையடுத்து மூன்றாவது முறையாக மே17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தெலங்கானா அரசு மே 19வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்துள்ளது. அதேவேளையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று பேசிய தெலங்கானா முதல்வர், “ மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் அனைத்தும் பொருந்தும். ஆனால் சிவப்பு மண்டல பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்படும். பொதுமக்கள் இரவு 7மணிக்குள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மே15 ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமைக்கு ஏற்ப மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும்.
பச்சை மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், ஹைதராபாத்தில் சில கடைகள் திறக்கப்படுவதும் குறித்தும் அப்போது முடிவு எடுக்கப்படும். ஹைதராபாத் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு ஊரடங்கை கடுமையாக பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.