தெலங்கானாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது மக்கள் காலணியை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ கடந்திருக்கிறது. மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரெங்கா ரெட்டியும் ஒன்று.
இந்நிலையில் அங்கு ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மஞ்சி ரெட்டி கிஷன், அவரது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். அப்போது நிவாரண உதவிகள் எதுவும் வழங்காமல், சேதங்களை மட்டும் பார்வையிட்டதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் மீது மக்கள் காலணியை வீசினர். சட்டமன்ற உறுப்பினரின் வாகனமும் அப்பகுதி வாசிகளால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.