கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது.
தடையை மீறி அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாதி மூளை, பாதி அதிர்ஷ்டம் என
விளம்பரப்படுத்தப்படும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு பலரும் பொருளாதார ரீதியில் பணத்தை இழப்பதுடன், தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதிர்ச்சி
தகவல் வெளியானது. இதையடுத்து, ஆன்லைனில் ரம்மி விளையாட தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது.