தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர், உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கிக்கு எதிராக நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “குறிப்பிட்ட தூரத்தில் டெலிவரி செய்ய இலவசம் என்ற மெம்பர்ஷிப்பை ஸ்விக்கியில் நான் வாங்கி உள்ளேன்.
அப்படியிருக்கையில், நவம்பர் 1ம் தேதி ஸ்விக்கியில் நான் ஆர்டர் செய்தபோது என் வீட்டிற்கும், உணவகத்திற்கும் இடையே உள்ள தூரத்தை 9.7 கி.மீ என்பதில் இருந்து 14 கி.மீ தூரம் என ஸ்விக்கியின் இணையதளம் அதிகரித்து காட்டியது. இதன் காரணமாக என்னிடம் 103 ரூபாய் கூடுதலாக டெலிவரி கட்டணமாக வசூலிக்கப்பட்டது” ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், சுரேஷ் பாபு கூகுள் மேப் ஸ்கிரீன்ஷாட்டுகளை ஆதாரமாக நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதனை விசாரித்த ஆணையம், “உணவு டெலிவரிக்காக பாபு செலுத்திய தொகையை அந்த தேதியிலிருந்து 9 % வட்டியுடன் கணக்கிட்டால் 350.48 ரூபாய் வருகிறாது. இத்துடன் டெலிவரி கட்டணமான 103 ரூபாயையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் திருப்பி செலுத்த வேண்டும்
மேலும் வாடிக்கையாளாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5,000 ரூபாயும் செயற்கையாக தூரத்தை உயர்த்தி காட்டியதற்காக 5,000 ரூபாயையும் சுரேஷ் பாபுவுக்கு நிறுவனம் திருப்பி செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இத்துடன், மாவட்ட நுகர்வோர் நல நிதியில் 25,000 ரூபாயை டெபாஸிட் செய்யவும் ஸ்விக்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.