தெலங்கானாவில் ராகுலுக்கு ஷாக் கொடுத்த காங்கிரசின் ஓபிசி முகமான லக்ஷ்மையா - காய் நகர்த்தும் பிஆர்எஸ்!

காங்கிரஸ் ரூ.500க்கு சிலிண்டர்களை வழங்குவோம் என அறிவித்திருந்த நிலையில் கே.சி.ஆர். ரூ.400க்கு சிலிண்டர்களை வழங்குவோம் என அறிவித்துள்ளார்.
தெலுங்கானா காங்கிரஸ் - பி.ஆர்.எஸ்
தெலுங்கானா காங்கிரஸ் - பி.ஆர்.எஸ் pt web
Published on

ஐந்து மாநில தேர்தல் தேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐந்து மாநிலங்களிலும் நடக்கும் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் சூழலில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தெலுங்கானவில் காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் கேசிஆர் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்த திட்டங்களை ஒட்டி அதை ஒன்றுமில்லாமல் செய்யும் வகையிலேயே திட்டங்களை அறிவித்துள்ளார்.

தெலுங்கானா காங்கிரஸ் - பி.ஆர்.எஸ்
”ஏன் நடவடிக்கை எடுக்கவிலை; இது தமிழக அரசின் தோல்வி”- சென்னிமலை விவகாரம் குறித்து எல்.முருகன் கருத்து

காங்கிரஸ் ரூ.500க்கு சிலிண்டர்களை வழங்குவோம் என அறிவித்திருந்த நிலையில் கே.சி.ஆர். ரூ.400க்கு சிலிண்டர்களை வழங்குவோம் என அறிவித்துள்ளார். சௌபாக்ய லட்சுமி திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை தற்போது ரூ.2016 வழங்கப்பட்டு வரும் சூழலில் அடுத்தாண்டு முதல் ரூ.3000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இது படிப்படியாக 5000 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ரைத்து பந்து (RYTHU BANDHU) திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 16 ஆயிரம் ரூபாய் ஆக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா காங்கிரஸ் - பி.ஆர்.எஸ்
இஸ்ரேலுக்கு அதிர்ச்சி தந்த ஹமாஸ்... மூளையாக செயல்பட்ட மூவர்.. யார் இவர்கள்? அதிர்ச்சி பின்னணி!

தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு காங்கிரஸ் சவால் அளிக்கிறது என்றாலும் வெற்றி வாய்ப்பு கே.சி.ஆர். பக்கம் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் மூத்த தலைவர் பொன்னால லக்ஷ்மையா பதவி விலகியுள்ளார். வேட்பாளர்கள் தேர்வில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக எழுந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அவர் பிஆர்எஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com