பாஜகவின் 'துல்லியத் தாக்குதலை' தெலங்கானா மக்கள் தடுத்துவிட்டார்கள்: ஓவைசி கருத்து

பாஜகவின் 'துல்லியத் தாக்குதலை' தெலங்கானா மக்கள் தடுத்துவிட்டார்கள்: ஓவைசி கருத்து
பாஜகவின் 'துல்லியத் தாக்குதலை' தெலங்கானா மக்கள் தடுத்துவிட்டார்கள்: ஓவைசி கருத்து
Published on

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுதீன் ஓவைசி, "பாஜகவின் கால்தடங்களை தெலங்கானா மாநிலத்தில் விரிவுபடுத்துவதை மக்கள் தடுத்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

"பாஜக இப்போது ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களில் மீண்டும் வெற்றிபெற முடியாது" என்று அகில இந்திய மஜ்லிஸ்-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஹைதராபாத் எம்.பி ஓவைசி, தெலங்கானாவில் பாஜக கால்பதித்துவிட்டது என்ற கருத்தை நிராகரித்தார். பழைய நகரத்திலும், பிற பகுதிகளிலும் பாஜகவால் ஊடுருவ முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

"புயல் எங்கே? புயல் இருந்திருந்தால், மகாராஷ்டிரா எம்.எல்.சி தேர்தலில் பாஜக தோல்வியடைந்திருக்காது. ஹைதராபாத் பழைய நகரத்தில் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' செய்வதாக பாஜக கூறியிருந்தது, அவர்களால் என் பகுதியில் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், நாங்கள் செய்தோம் ஒரு ஜனநாயக ஸ்டிரைக். நாங்கள் 51 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களை வென்றோம். 80 இடங்களில் எங்கள் கட்சி போட்டியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தியுங்கள்" என்று ஓவைசி கூறினார்.

மேலும், "தெலங்கானா மக்கள் பாஜகவின் கால்தடங்களை மாநிலத்தில் விரிவுபடுத்துவதை தடுத்திருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவுகளில், டிஆர்எஸ் 55 இடங்களையும், எய்ஐஎம் 44 இடங்களையும், பாஜக 48 இடங்களையும் பெற்றன. காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே வென்றது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் பேசியதாகவும், சனிக்கிழமையிலிருந்து தங்கள் பணிகளைத் தொடங்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஓவைசி கூறினார். மேயர் பதவி குறித்து பேசிய ஒவைசி, தனது கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com