பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா உடனான கூட்டணியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவுடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சார்ந்த தேஜஸ்வி யாதவ், “ஆட்டம் இன்னமும் மிச்சமிருக்கிறது. கூட்டணி ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு நாங்கள் உரிமை கொண்டாடுவதில் என்ன தவறு உள்ளது?
முன்னர் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தபோது மக்களுக்கு வேலை அளிக்கமுடியாது என இதே முதல்வர் கூறினார். ஆனால் ஆர்.ஜே.டி.யுடன் (ராஷ்ட்ரிய ஜனதா) கூட்டணி அரசு அமைந்த போது மக்களுக்கு நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்து அதை செய்து காட்டினோம்.
சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டில் நாங்கள் புதிய கொள்கைகளை கொண்டுவந்தோம். 17 மாதங்களில் நாங்கள் செய்த வேலைகளை 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியால் செய்யமுடியவில்லை” என விமர்சித்தார்.