சிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம்

சிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம்
சிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம்
Published on

ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாத் சிவபெருமான் வேடமிட்டு பிரார்த்தனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேஜ் பிரதாப் இதுபோல் வித்தியாசமாக செயல்படுவது இது முதல்முறையல்ல; பலமுறை இதேபோல், வித்தியாசமாக ஏதேனும் செய்து கொண்டே இருப்பார். இதற்கு முன்பு கிருஷ்ணர் வேடமிட்டு புத்தாண்டைக் கொண்டாடி இருந்தார். சமீபத்தில் சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்ட போது அவர் கீழே விழுந்த வீடியோ காட்சி வைரலானது.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள கோயில் ஒன்றில் சிவபெருமான் வேடமிட்டு தேஜ் பிரதாப் இன்று பூஜைகள் செய்துள்ளார். சிவபெருமானைப் போல் புலி ஆடையை, ருத்ராக்‌ஷா மாலையும் அணிருந்திருந்தார். அப்போது, உடுக்கை அடித்து, சங்கு ஊதி பூஜை செய்தார். 

இந்த வழிபாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பீகார் மக்கள் நன்றாக இருக்கவேண்டும், தேச முழுவதும் எந்தவொரு பிரிவினையோ அல்லது தடையையோ இல்லாமல், இணக்கமாக. அமைதியாக வாழவேண்டும் என்பதற்காக நான் பிரார்த்தனை செய்தேன். அதுமட்டுமின்றி என் தந்தையின் உடல்நலத்திற்காகவும் அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்’ என்றார் தேஜ் பிரதாப்.

சிவபெருமான் வேடத்தில் தேஜ் பிரதாப் இருக்கும் புகைப்படங்களும், அவர் பூஜை செய்த வீடியோவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

29 வயதாகும் தேஜ் பிரதாப் நிதிஷ்குமாருடன் கூட்டணியில் இருந்த போது அமைச்சராக இருந்தவர். தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். மக்களிடம் நேரடியாக சென்றடைய இவ்வாறு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com