குடும்பத்திற்கு செய்த கொடுமையை மறந்து கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவும் இளம்பெண்

குடும்பத்திற்கு செய்த கொடுமையை மறந்து கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவும் இளம்பெண்
குடும்பத்திற்கு செய்த கொடுமையை மறந்து கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவும் இளம்பெண்
Published on

மேற்கு வங்கத்தில் சூனியக்காரி எனக்கூறி குடும்பத்தையே விரட்டியடித்த கிராம மக்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவி வருகிறார் அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சூனியக்காரி எனக்கூறி தாயும் மகள்களும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் வேறு கிராமத்தில் அந்த குடும்பம் குடியேறியது. இந்நிலையில் தனது சொந்த கிராம மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை தாங்க முடியாத அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், வாடகை வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்று அந்த கிராம மக்களுக்கு உதவி வருகிறார்.

தனது பத்து வயதில் கிராமத்தினரால் தங்கள் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைவு கூர்ந்தார். பெண் குழந்தைகளை படிக்க வைத்ததால் தமது தாயை சூனியக்காரி என கிராம மக்கள் முத்திரை குத்தியதாகவும், தற்போது கிராமமே கொரோனாவால் மூச்சுத்திணறும் நிலையில், அவர்கள் செய்த அநியாயத்தை மறந்து அவர்களுக்கு உதவி செய்வதாகவும் இளம்பெண் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com