“விடியலை காட்டிய சூரியன்கள்”- இன்று ஆசிரியர் தினம்

“விடியலை காட்டிய சூரியன்கள்”- இன்று ஆசிரியர் தினம்
“விடியலை காட்டிய சூரியன்கள்”- இன்று ஆசிரியர் தினம்
Published on
ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
 
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13-ம் தேதி இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். 
 
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை குடியரசுத் தலைவரே வழங்கி கவுரவிக்கிறார். 
 
இந்த ஆண்டு, ஆசிரியர் தின விழா இன்று எளிய முறையில் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், 375 ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும், 7ம் தேதி மாவட்ட வாரியாக விழா நடத்தி, விருது வழங்கப்படுகிறது.
 
மாநில அளவிலான விருது விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால், அரசு பள்ளிகளில் விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகள் தரப்பில், 'ஆன்லைனில்' ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com