ஒடிசா மாநிலத்தில் குடை வரைய தெரியாத மாணவர்களை, ஆசிரியையின் கணவர் அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலகிர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வருபவர் லட்சுமி மெகர். தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், லட்சுமி மெகர் வேறு வகுப்புக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அப்போது ஒன்று மற்றும் 2-ம் வகுப்புகளை லட்சுமி மெகரின் கணவர் கவனித்து வந்துள்ளார்.
மாணவர்களை குடை வரையுமாறு அவர் கூறிய நிலையில், மாணவர்கள் சரியாக வரையவில்லை எனத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர், மாணவர்களை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.