’’என் பைக்கை தொடுவியா?’’- பட்டியலின மாணவனை இரும்புக் கம்பி, துடைப்பத்தால் தாக்கிய ஆசிரியர்

’’என் பைக்கை தொடுவியா?’’- பட்டியலின மாணவனை இரும்புக் கம்பி, துடைப்பத்தால் தாக்கிய ஆசிரியர்

’’என் பைக்கை தொடுவியா?’’- பட்டியலின மாணவனை இரும்புக் கம்பி, துடைப்பத்தால் தாக்கிய ஆசிரியர்
Published on

ஆசிரியரின் பைக்கை ஆசையாய் தொட்டுப்பார்த்த பட்டியலின மாணவனை வகுப்பறைக்குள் வைத்து பூட்டி இரும்புக் கம்பி மற்றும் துடைப்பத்தால் அடித்து தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாக்ரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட ராணௌபூர் கிராமத்திலுள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் கிருஷ்ணா மோகன் ஷர்மா. 6-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், இவருடைய பைக்கை தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்த ஷர்மா கோபமடைந்து சிறுவனை வகுப்பறைக்குள் வைத்து பூட்டியுள்ளார். இருப்பினும் ஆத்திரம் அடங்காததால் சிறுவனை இரும்புக் கம்பி மற்றும் துடைப்பத்தால் அடித்து தாக்கியுள்ளார். மேலும் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு ஆசிரியர் சிறுவனை வகுப்பறையிலிருந்து மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளார்.

நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் சிறுவன். மேலும் அவரது உடலிலிருந்த காயங்களை காட்டி பெற்றோர் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொகுதி கல்வி அதிகாரி மற்றும் காவல் நிலைய அதிகாரி இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் குடும்பத்தாரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்து அனுப்பியுள்ளனர். அதன்படி, கிருஷ்ணா மோகன் ஷர்மா தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com