டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜகவைச் சேர்ந்த அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜோதிராதித்ய சிந்தியா, அர்ஜூன் ராம் மேக்வால், ஜிதேந்திரசிங், கிரண் ரிஜூஜூ, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப்சிங் பூரி, தர்மேந்திர பிரதான், சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடு கிஞ்ராப்பு, சந்திரசேகர் பெம்மாசானி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எச்.டி.குமாரசாமி, லோக் ஜனசக்தி கட்சி எம்.பி. சிராக் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. ராம்நாத் தாக்கூர் உள்ளிட்டோரும் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது, நாடாளுமன்ற செயல்பாடுகள், துறை ரீதியிலான பணிகளை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்கினார்.