ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

ஜெகன் மோகன் ரெட்டி தங்குவதற்காக ரூ.500 கோடி மதிப்பில் மலை உச்சியில் அரண்மனையை வீடு கட்டி உள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுஎக்ஸ் தளம்
Published on

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்த சீக்ரெட் தகவல்களைத் தேடும் பணியில் சந்திரபாபு நாயுடு ஆட்சி களமிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தம்மைச் சிறையில் வைத்த ஜெகனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், அவர் சம்பந்தமான புகார்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது. ஆனால், அதற்கு முன்னரே அவரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

இந்த நிலையில், விசாகப்பட்டினம் ருஷிகொண்டாவில் ஜெகன் மோகன் ரெட்டி, அரண்மனை போன்ற பங்களாவைக் கட்டியிருந்தார். அவரது முகாம் அலுவலகமும் அங்கேயே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாகப் பெரியளவில் எந்த தகவலும் வெளியில் தெரியவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், இந்த பங்கா குறித்த தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன. ”ஜெகன் மோகன் ரெட்டி தங்குவதற்காக ரூ.500 கோடி மதிப்பில் மலை உச்சியில் அரண்மனையை வீடு கட்டி உள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது” என தெலுங்கு தேசம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதில் ஏதாவது பொறி சிக்குமா என தற்போதைய ஆட்சி கர்வம் கட்டிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க: இந்திய அணியின் முன்னாள் வீரர்.. கர்நாடகாவில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை.. ஜெய்ஷா இரங்கல்!

ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
பரப்புரையில் கல்வீச்சு தாக்குதல்.. நெற்றியில் காயம்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்-க்கு நடந்தது என்ன?

இதுதொடர்பாகத் தெலுங்கு தேசம் செய்தித் தொடர்பாளர் ராம் கொம்மாரெட்டி பட்டாபி, "இந்த பங்களாவில் இருக்கும் ஆடம்பரம் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள குளியல் தொட்டி இருக்கிறது. மரச் சாமான்கள், மசாஜ் டேபிள் என்று எல்லாமே விலை உயர்ந்தவையாகவே இருக்கிறது. ஆந்திரப் பிரதேச அரசுக்கு ஏற்கெனவே ரூ.12 லட்சம் கோடி கடன் இருக்கிறது. மாநிலத்தின் மோசமான நிதி நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் இந்த பங்களாவைக் கட்டியுள்ளனர். இந்த கட்டுமான ஒப்பந்தமும்கூட ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினருக்கே வழங்கப்பட்டுள்ளது” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் சூடுபிடித்துள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் கனுமுரி ரவி சந்திர ரெட்டி, “இந்த பங்களா ஜெகன்மோகன் ரெட்டியின் தனிப்பட்ட சொத்து இல்லை.. அது அவருக்குச் சொந்தமான இடத்திலும் கட்டப்பட்ட பங்களா இல்லை. இது அரசின் சொத்துதான். அதில் முறைகேடுகள் எதுவும் இல்லை. இது அரசு தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த பங்களா ஆந்திரப் பிரதேச அரசுக்குச் சொந்தமானது. ஜெகன் மோகன் ரெட்டி அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமானது இல்லை. ஆந்திர கட்டுமான கலையைக் காட்டும் வகையில் அவை கட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!

ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
ஆந்திரா முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு... அமைச்சரவையில் பவன் கல்யாண்!

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான சந்திரபாபு நாயுடு, 2017ஆம் ஆண்டில் கிருஷ்ணா நதிக்கரை அருகே அரசு செலவில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பிரஜா வேதிகா என்ற பங்களாவைக் கட்டியிருந்தார். அவருடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே இந்த பங்களா இருந்தது. இந்த பங்களாவை, அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக அவர் பயன்படுத்தி வந்தார்.

ஆனால் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரஜா வேதிகா பங்களா, கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அக்கட்டடம் இடிக்கப்பட்டது. அதை நினைவில் வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு அரசு, தற்போது அதற்குப் பழிவாங்கவே ஜெகனின் ருஷிகொண்டா அரண்மனையைக் குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: முதல் தென்கிழக்கு ஆசிய நாடு| தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்தது தாய்லாந்து!

ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
ஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com