மக்களவையில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு

மக்களவையில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு
மக்களவையில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு
Published on

மக்களவையில் தமிழக எம்.பிக்கள் இன்று தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர். மற்றும் ஸ்மிருதி இரானி, சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் நேற்று பதவியேற்றனர்.

இதையடுத்து இன்றும் பல்வேறு மாநில உறுப்பினர்கள் பதவியேற்றனர். இன்றைய நிகழ்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 39 எம்பிக்களும் பதவியேற்றனர். அனைவரும் தமிழ் மொழியிலேயே பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

வடசென்னை எம்.பியாக, கலாநிதி வீராசாமி, தென் சென்னை எம்.பியாக, தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னை எம்.பியாக, தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பியாக, டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் எம்.பியாக, ஜி.செல்வம், அரக்கோணம் எம்.பியாக, ஜெகத்ரட்சகன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பியாக, டாக்டர் செல்லக்குமார், தர்மபுரி எம்.பியாக செந்தில்குமார், திருவண்ணாமலை எம்.பி, சி.என்.அண்ணாதுரை, ஆரணி எம்.பி, விஷ்ணு பிரசாத், விழுப்புரம் எம்.பியாக, ரவிக்குமார்,  கள்ளகுறிச்சி எம்.பியாக கவுதம் சிகாமணி, சேலம் எம்.பியாக, எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் எம்.பியாக சின்ராஜ், ஈரோடு எம்.பியாக, கணேசமூர்த்தி, திருவள்ளூர் எம்.பியாக ஜெயக்குமார், திருப்பூர் எம்.பியாக, சுப்பராயன், நீலகிரி எம்.பியாக ஆ.ராசா, கோவை எம்.பியாக பி.ஆர் நடராஜன், பொள்ளாச்சி எம்.பியாக, கே.சண்முக சுந்தரம், திண்டுக்கல் எம்.பியாக வேலுசாமி, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பியாக ஜோதிமணி, திருச்சி எம்.பியாக திருநாவுக்கரசர், பெரம்பலூர் எம்.பியாக டாக்டர் பாரிவேந்தர், கடலூர் எம்.பியாக டி.ஆர்.வி.எஸ் ரமேஷ், சிதம்பரம் எம்.பியாக தொல்.திருமாவளவன், மயிலாடுதுறை எம்.பியாக ராமலிங்கம், நாகப்பட்டினம் எம்.பியாக செல்வராஜ், தஞ்சாவூர் எம்.பியாக பழனிமாணிக்கம், சிவகங்கை
எம்.பியாக கார்த்தி சிதம்பரம், மதுரை எம்.பியாக சு.வெங்கடேசன், தேனி எம்.பியாக பா. ரவீந்திரநாத் குமார், விருதுநகர் எம்.பியாக மாணிக்கம் தாகூர், ராமநாதபுரம் எம்.பியாக நவாஸ் கனி, தூத்துக்குடி எம்.பியாக கனிமொழி, தென்காசி எம்.பியாக தனுஷ் எம்.குமார், திருநெல்வேலி எம்.பியாக ஞானதிரவியம், கன்னியாகுமரி எம்.பியாக எச். வசந்தகுமார் ஆகியோர் பதவியேற்றனர். 

திமுக எம்.பிக்கள், கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க என்றும் கூறி பதவியேற்றனர். பெரும்பாலும் அனைத்து எம்.பிக்களும் தமிழ் வாழ்க என்று கூறி பதவியேற்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com