விரைவுச் செய்திகள்: பிரதமரை நாளை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்; 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

விரைவுச் செய்திகள்: பிரதமரை நாளை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்; 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
விரைவுச் செய்திகள்:  பிரதமரை நாளை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்; 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Published on

பிரதமரை நாளை சந்திக்கிறார் ஆளுநர் புரோகித்:

பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் நாளை சந்திக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபின் முதன்முறையாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கிடுக:

தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் வலியுறுத்தி உள்ளார். 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி குறித்து கோரிக்கை விடுத்ததாகவும் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.

மேகதாது அணை- 12ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம்:

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக வரும் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார். அடுத்தக்கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை என அதிமுக தொண்டர்கள் முழக்கம்:

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது ஒற்றைத் தலைமை ஓபிஎஸ் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்வும் தெரிவித்திருக்கிறது.

பசுமை தீர்ப்பாயம் -உயர் நீதிமன்றம் கருத்து:

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 5 அமர்வுகளில் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

புதிதாக 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்:

நாடு முழுவதும் ஆயிரத்து 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 3ஆவது அலைக்கு தயாராகும் வகையில் ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் தேவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு புது இணையதளம்:

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகைகள் வெளிப்படையாக இடம்பெறும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் நிவாரண நிதியாக சுமார் 472 கோடி ரூபாய் வந்திருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று உயர்வு:

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் தொற்று எண்ணிக்கையில் பாதிக்குமேல் கேரளா, மகாராஷ்டிராவில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

தனியுரிமை கொள்கை நிறுத்திவைப்பு:

புதிய தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும்வரை பயனாளிகளுக்கான தனியுரிமை கொள்கை நிறுத்தி வைக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் உறுதியளித்திருக்கிறது.

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 15 ஆக உயர்வு:

கேரளாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி பெண் நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

வங்கதேச தீ விபத்து -52 பேர் உயிரிழப்பு:

வங்கதேசத்தின் ரூப்கஞ்ச் பகுதியில் உள்ள ரசாயன சுத்திகரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 52 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com