விரைவுச் செய்திகள்: மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி - பிரதமர் | புதுச்சேரி +2 தேர்வு ரத்து

விரைவுச் செய்திகள்: மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி - பிரதமர் | புதுச்சேரி +2 தேர்வு ரத்து
விரைவுச் செய்திகள்: மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி - பிரதமர் | புதுச்சேரி +2 தேர்வு ரத்து
Published on

மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் அனைத்தையும் இனி மத்திய அரசே வழங்கும் என்றும், தனியாக கொள்முதல் செய்யத் தேவையில்லை என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு 75%; தனியாருக்கு 25% தடுப்பூசிகள்: நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தீபாவளி வரை ரேஷனில் உணவு தானியங்கள் இலவசம்: ஏழை எளிய மக்கள் வரும் தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதனால் 80 கோடி பேர் பயனைடவார்கள் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த இ - பதிவு இணையதளம்: தமிழகத்தில் காலை முதல் முடங்கியிருந்த இ- பதிவுக்கான இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பதிவுகள் தொடங்கப்பட்டது.

அத்துமீறிய ஓட்டுநர் மீது 6 பிரிவுகளில் வழக்கு: சென்னையில் இ - பதிவு செய்யாமல் வந்ததோடு, பெண் காவல் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குழந்தைகள் விவரத்தை திரட்டுக: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பான தகவல்களை மாவட்ட வாரியாக திரட்டி 24 மணிநேரத்தில் தரவுகளை சமர்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்: தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புராதன கோயில்களை பாதுகாக்க மத்திய சிலைக்கடத்தல் பிரிவு அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் விரைவுபடுத்தப்படும்: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு ரத்து: புதுச்சேரி மாநிலத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் +2 தேர்வு நடைபெறாது என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். +2 மதிப்பெண் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு - அமைச்சர் விளக்கம்: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதே காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு - ராகுல் கண்டனம்: பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசில் வரி வசூல் என்ற தொற்று அலையலையாக வந்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

செப்.19 முதல் ஐபிஎல் தொடர்கிறது?: ஐபிஎல் கிரிக் கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 வரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com