விரைவுச் செய்திகள்: கனமழை வாய்ப்பு | ஆப்கனில் இந்தியர்கள் கடத்தலா? | ஓணம் கொண்டாட்டம்

விரைவுச் செய்திகள்: கனமழை வாய்ப்பு | ஆப்கனில் இந்தியர்கள் கடத்தலா? | ஓணம் கொண்டாட்டம்
விரைவுச் செய்திகள்: கனமழை வாய்ப்பு | ஆப்கனில் இந்தியர்கள் கடத்தலா? | ஓணம் கொண்டாட்டம்
Published on

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட 18 மாவடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இந்தியர்கள் கடத்தலா? - தலிபான்கள் மறுப்பு: ஆப்கானிஸ்தானில் விமானநிலையம் அருகே காத்திருந்த 100-க்கும் அதிகமான இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அரசு அமைக்க நடவடிக்கை: ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பதற்கான நடவடிக்கையை தலிபான்கள் தொடங்கினர். அமைப்பின் இணை நிறுவனர் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அறிவித்திருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு - முதலமைச்சர் ஆலோசனை: கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பதா? கட்டுப்பாடுகளை விதிப்பதா? என மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

பெரம்பலூர்- சீரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்: பெரம்பலூரில் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு சீரமைப்பு பணிகளை குடியிருப்புவாசிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

காவல்நிலையத்தில் மோதல் - 6 பேருக்கு தடை: சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட விவகாரத்தில் ஆறு வழக்கறிஞர்கள் இந்தியாவுக்குள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டிருக்கிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு: பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தனர். இது கொலையா, தற்கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்: சுருக்குமடி வலைக்கு எதிரான 3 மாவட்ட மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் 7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்.

குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள சிறப்பு வார்டில் இதனால் விபத்து ஏற்பட்டது.

டெல்லியில் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு: டெல்லியில் தொடர் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்வதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் கொண்டாட்டம்: கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

படகு கவிழ்ந்து விபத்து - 52 பேர் உயிரிழப்பு?: ஸ்பெயினின் கேனரி தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 52 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com