புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடத் தடையில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம் எனவும் கேட்டுகொண்டார். மேலும், தமிழகத்தையொட்டிய புதுச்சேரி பகுதிகளில்தான் தொற்று அதிகரித்து இருப்பதாகவும், எனவே, புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கத் தடையில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானாவிலும் மிக உயரமான சிலைகளை வைக்க அனுமதி அளித்திருப்பதாகவும், மக்கள் கட்டுப்பாடுகளுடன் இறைவனை வணங்க நினைக்கும்போது அரசாங்கங்கள் அதற்கு செவிசாய்ப்பதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.