கத்தார் விபத்தில் ஐவர் பலி; தமிழக தம்பதியின் உடல்கள் இந்தியா வருவதிலும் தாமதம்!

வளைகுடா நாட்டில் பாலமொன்றில் நடந்த விபத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதிகளின் உடலானது இன்னும் இந்தியா வராததால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள்
விபத்தில் இறந்தவர்கள்PT
Published on

கத்தார் நாட்டில் தோஹா என்ற இடத்திலுள்ள ஒரு பாலத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில், காரில் பயணித்த ஐவர் பலியாகினர். இவர்களில் மதுரையை சேர்ந்த ஒரு இளம் தம்பதியும் இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் இறந்து கிட்டத்தட்ட ஒரு வார காலமாகியும், மதுரையை சேர்ந்த அந்த இளம் தம்பதியின் உடல்கள் இந்தியா வராததால் குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் தோஹா என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தவர் கேரளாவை சேர்ந்த ரோசின் ஜான் (வயது 38). இவர் மனைவி ஆனி கோம்ஸ் (வயது 30). ஆனியின் சகோதார் ஜி ஜோ கோம்ஸ் (வயது 34.) இவர்களது நண்பர்கள் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சங்கர் (வயது 38) மற்றும் அவரின் மனைவி நாகலெட்சுமி (வயது 33). இவர்களில் பிரவீன் சங்கரும் நாகலெட்சுமியும் மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

கேரளாவை சேர்ந்தவர்கள்
கேரளாவை சேர்ந்தவர்கள்

மேற்குறிப்பிட்ட ஐவரும், கடந்த வாரம் (ஜூன் 29 என சொல்லப்படுகிறது) தோஹாவில் காரில் பயணம் செய்தபோது, பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேரும் பலியாகினர்.

உயிரிழந்த ஐவரில் பிரவீன் சங்கர் மற்றும் நாகலட்சுமி ஆகியோரின் உடல்கள், ஒரு வாரம் ஆகியும் இந்தியா வரவில்லை என சொல்லப்படுகிறது. இருவரும் இறந்த துக்கம் ஒருபுறமிருக்க, உடல்கூட இந்தியா வரவில்லை என்ற துயரம் இன்னொரு பக்கம் உறவினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு உறவினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர்கள்
மதுரையை சேர்ந்தவர்கள்

இவ்விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com