நிலா ஒளியில் மிளிரும் தாஜ்மஹாலை இரவில் ரசிக்க மீண்டும் அனுமதி

நிலா ஒளியில் மிளிரும் தாஜ்மஹாலை இரவில் ரசிக்க மீண்டும் அனுமதி
நிலா ஒளியில் மிளிரும் தாஜ்மஹாலை இரவில் ரசிக்க மீண்டும் அனுமதி
Published on

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் வரலாற்று காதல் சின்னமான தாஜ்மஹாலை இரவிலும் ரசிக்க, இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் யமுனை நதிக் கரையோரம் அமைந்துள்ளது தாஜ்மஹால். முகலாய அரசர் ஷாஜகானால் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை இரவு நேரத்தில் நிலவொளியில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை ரசிக்க ஏராளமானோர் வருவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் 17 இல் இரவு பார்வையாளர்களுக்கு தாஜ்மஹால் மூடப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல், இரவு நேரத்தில் மூன்று பகுதிகளாக பார்வையாளர்களுக்கு தாஜ்மஹாலை காண அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து, ஆக்ரா தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்த் குமார் ஸ்வரன்கர் "தாஜ்மஹாலை இரவில் ரசிக்க, ஆக., 21, 23, 24 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 8:30 - 9:00; 9:00 - 9:30; மற்றும் 9:30 - 10:00 மணி வரை என மூன்று பிரிவுகளில் அனுமதி வழங்கப்படும்" என்றார்.

மேலும் "ஒவ்வொரு பிரிவிலும், தலா 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கான டிக்கெட்டை ஆக்ரா மால் சாலையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி கிடையாது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com