நிதின் கட்கரி மகளின் திருமணத்திற்கு ஸ்கேனியா சொகுசு பஸ் பரிசா?: ஸ்வீடன் செய்தியால் சர்ச்சை

நிதின் கட்கரி மகளின் திருமணத்திற்கு ஸ்கேனியா சொகுசு பஸ் பரிசா?: ஸ்வீடன் செய்தியால் சர்ச்சை
நிதின் கட்கரி மகளின் திருமணத்திற்கு ஸ்கேனியா சொகுசு பஸ் பரிசா?: ஸ்வீடன் செய்தியால் சர்ச்சை
Published on

இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ளார் நிதின் கட்கரி. ஸ்வீடன் நாட்டின் பேருந்து வடிவமைப்பு நிறுவனமான ஸ்கேனய்யாவிற்கும், அமைச்சர் நிதின் கட்கரியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஸ்வீடன் நாட்டு ஊடகம். 

கடந்த 2017 இன் இறுதியில் இந்த பஸ் வடிவமைப்பு நிறுவனமான ஸ்கானியா இந்திய அமைச்சர் ஒருவருக்கு சொகுசு பேருந்தை பரிசாக அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து அசைன்மெண்ட் பெரும் நோக்கில் ஆதாயத்தின் அடிப்படையில் இதை அந்நிறுவனம் செய்துள்ளது. அதை ஒப்புக்கொண்டும் உள்ளது. இந்த பேருந்து தான் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அமைச்சர் கட்கரியின் மகளின் திருமணத்தின் போதும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த பேருந்தின் உரிமையாளர் விவரம் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து தகவல் சரிவர இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“அமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் புனையப்பட்ட குற்றச்சாட்டு இது. இதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என இதற்கு நிதின் கட்கரி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதே போல கடந்த 1980 களில் ஸ்வீடன் நாட்டு வானொலியில் எழுந்த குற்றச்சாட்டினால் ஆட்சி மாற்றம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தகவல் உறுதுணை : The Wire

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com