ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் சுதேசி பொருட்களைப் பயன்படுத்துவதால் நாம் அனைத்து வெளிநாட்டு தயாரிப்புகளையும் புறக்கணிப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என நேற்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மட்டுமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தி பேசியுள்ளார்.
ஆன்லைனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்…
‘நமக்கு ஏற்றவற்றை நாம் இறக்குமதி செய்வோம். சுதேசி என்றால் உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை விரும்புவது மற்றும் ஊக்குவிப்பதும் தான். அதே நேரத்தில் எல்லா வெளிநாட்டு தயாரிப்புகளையும் நாம் புறக்கணிக்க கூடாது.
உலகை ஒரு குடும்பமாக பார்க்க வேண்டும். சந்தையாக பார்க்க கூடாது. கொரோனாவுக்கு பிந்தைய உலகில் சுய ஆட்சி சிந்தனை கொண்ட நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் தேவை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடியின் தற்சார்பு இந்தியா பார்வையையும் அவர் இந்நிகழ்வில் ஆதரித்து பேசியுள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையையும் பாராட்டி அவர் பேசியுள்ளார்.