பாக்.,கில் இருந்து இந்தியா ‌திரும்பிய பெண்: பெற்றோரை கண்டுபிடித்து தர கோரிக்கை

பாக்.,கில் இருந்து இந்தியா ‌திரும்பிய பெண்: பெற்றோரை கண்டுபிடித்து தர கோரிக்கை
பாக்.,கில் இருந்து இந்தியா ‌திரும்பிய பெண்: பெற்றோரை கண்டுபிடித்து தர கோரிக்கை
Published on

பாகிஸ்தானில் இருந்து தாயகமான இந்தியாவுக்கு திரும்பிய மாற்றுத்திறனாளி பெண்ணின் பெற்றோரை கண்டுபிடிக்க உதவி செய்யக்கோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கீதா என்பவர் 17 வருடங்களுக்கு முன்பு, ரயிலில் தனியாக லாகூர் சென்றுள்ளார். அங்குள்ள தன்னார்வ அமைப்பினர் கீதாவை மீட்டு, கராச்சி அழைத்து வந்துள்ளனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை‌ அடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு கீதா இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். இந்தியா வந்து 2 ஆண்டுகள் ஆன பின்னரும், கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்க நாட்டு மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com