ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மெக்சிகோ அமைச்சர் லூயிஸ் விடேகரே கஸோவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
தொடர்ந்து பெல்ஜியம் மற்றும் நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனும், சுஷ்மா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லுறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். இந்த சந்திப்புகளை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடக்கும் ஐ.நா. சீர்த்திருத்தங்களுக்கான உயர் நிலைக்குழு கூட்டத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கவுள்ளார். அதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் தலைமையில் பருவநிலை மாறுபாடு தொடர்பான சிறப்பு கூட்டத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.