53 வருடத்துக்குப் பின் லைசன்சை புதுப்பித்த முன்னாள் முதல்வர்!

53 வருடத்துக்குப் பின் லைசன்சை புதுப்பித்த முன்னாள் முதல்வர்!

53 வருடத்துக்குப் பின் லைசன்சை புதுப்பித்த முன்னாள் முதல்வர்!
Published on

முன்னாள் மத்திய அமைச்சரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே, 53 வருடத்துக்குப் பிறகு தனது டிரைவிங் லைசன்ஸை புதுப்பித்துள்ளார். இதற்காக அவருக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

சுஷில்குமார் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்தவர். இவருக்கு இப்போது 76 வயது. இவரது டிரைவிங் லைசன்ஸ் 1965-ம் ஆண்டோடு முடிவடைந்துவிட்டது. அப்போது கோர்ட்டில் பணியாற்றி வந்தார். பின்னர் போலீஸ் வேலையில் சேர்ந்த ஷிண்டே, சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். 1974-வரை போலீஸ் துறையில் இருந்த இவர், பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். எம்.எல்.ஏ ஆனார். பிறகு எம்.பி ஆனார். மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த சுஷில்குமார் ஷிண்டே, இப்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் 1965-க்குப் பிறகு தனது டிரைவிங் லைசன்சை புதுப்பிக்கவில்லை. இதையடுத்து நேற்று புதுப்பித்தார். 

இதுவரை புதுப்பிக்காததற்கு 2,560 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை கட்டிவிட்டு லைசன்ஸை புதுப்பித்துள்ளார் ஷிண்டே.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com