சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள்: பீகார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

’சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை பீகார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார்
பீகார்கோப்புப் படம்
Published on

பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன்முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை கடந்த அக். 2ஆம் தேதி வெளியிட்டது. அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (BC) 27.12% எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) 36.01% எனவும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்(SC) 19.65 % எனவும்,

பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST) 1.68 % எனவும், பொதுப் பிரிவினர் (GC)15.52 % எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகாரைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ’சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை பீகார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது என்று மறுத்துள்ள உச்சநீதிமன்றம், மாநில அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது’ என்றும் தெரிவித்துள்ளது.

பீகார்
பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு: விவரங்களை வெளியிட்டது மாநில அரசு!

பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 1 உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது.

அப்போது மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் தரப்பில், ’உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சாதிவாரி கணக்கெடுப்பின் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. கணக்கெடுப்புக்கான விவரங்களைச் சேகரிப்பதில் முறையான நோக்கம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் தனியுரிமை மீறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது’ என வாதம் வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: "மனதளவில் மனைவி என்னை துன்புறுத்துகிறார்”-விவாகரத்து பெற்றார் தவான்! மகனைக் காட்ட நீதிமன்றம் உத்தரவு

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "எந்த ஒரு தனிநபரின் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதனால், தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்ற வாதம் தவறானது" என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள், ‘சில தகவல்களை பீகார் அரசு வெளியிட்டதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதால், கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்ற மனுதாரரின் ஆட்சேபனையையும் நிராகரித்தனர்.

supreme court
supreme courtpt desk

’இந்த நேரத்தில் நாங்கள் எதையும் நிறுத்த முடியாது. மாநில அரசோ அல்லது எந்த அரசோ கொள்கை முடிவு எடுப்பதில் நாங்கள் தலையிட முடியாது. அது தவறாக முடியும்’ என தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை 2024ஆம் ஆண்டு ஜனவரிக்கு பட்டியலிட்டனர். மேலும், இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: AsianGames2023: சாய் கிஷோர், வாஷிங்டன் சுழலில் சுருண்ட வங்கதேசம்.. இறுதிப்போட்டியில் இந்திய அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com