நிர்பயா வழக்கு : தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கு : தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
நிர்பயா வழக்கு :  தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
Published on

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்தப்பெண் 13 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது. அதன்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com