மகாராஷ்டிரா விவகாரம் - அவசர வழக்கு நாளை விசாரணை

மகாராஷ்டிரா விவகாரம் - அவசர வழக்கு நாளை விசாரணை
மகாராஷ்டிரா விவகாரம் - அவசர வழக்கு நாளை விசாரணை
Published on

மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக 3 கட்சிகள் தொடர்ந்த அவசர மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. 

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் பட்னாவிசை பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசிவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இன்று இரவே அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் பாஜக நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த அவசர மனுவை நாளை காலை 11.30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com