மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீடு ரத்து - உச்சநீதிமன்றம்

மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீடு ரத்து - உச்சநீதிமன்றம்
மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீடு ரத்து - உச்சநீதிமன்றம்
Published on

மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

1992 உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பின் படி எந்த ஒரு மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று அசோக் புஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் கூறும் போது , “1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதனை மறுபரிசீலினை செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அதன்படி மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம். அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதே போல அதற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனர்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த ஒத்துக்கீடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் வராது. காரணம் அந்த இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாப்பை பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com