“சட்டவிரோதமாக...”- ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட 68 பேரின் பதவி உயர்வு நிறுத்திவைப்பு!

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். பதவி உயர்வு நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
supreme court
supreme courtpt desk
Published on

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார். குஜராத் மாநிலத்தின் சூரத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி வர்மா தீர்ப்பை வழங்கி இருந்தார். இவர் உட்பட 68 நீதிபதிகளுக்கு சமீபத்தில் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையில் குஜராத் அரசு இந்த பதவி உயர்வை மேற்கொண்டிருந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பதவி உயர்வு வழங்கப்பட்ட நீதிபதிகளில் சிலர் தகுதி தேர்வில் வெற்றி பெறாத சூழலில், சீனியாரிட்டி அடிப்படையில் குஜராத் அரசு பதவி உயர்வு வழங்க முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. இதை குறிப்பிட்டு 68 நீதிபதிகளுக்கு பதவி உயர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

இந்த வழக்கில் இன்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில், “பணி மூப்பு மற்றும் தகுதி தேர்வு தேர்ச்சியின் அடிப்படையிலே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் இவ்விவகரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மீறும் வகையிலும் இருக்கிறது” எனக் கூறி 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார் நீதிபதி.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இவ்வழக்கில் விசாரணை நடத்தி வரும் நீதிபதி எம்.ஆர்.ஷா, வரும் மே 15ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் இவ்வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரையின் பேரில் பொருத்தமான அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்தும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com