சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தங்கள் தீர்ப்பு இறுதியானது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனு, விரிவான அரசமைப்பு சாசன அமர்வுக்கு அனுப்பப்பட்டதை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு கடந்த மாதம் சென்ற பிந்து என்ற பெண் மிளகாய் பொடி ஸ்பிரே பீய்ச்சி தாக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சபரிமலை வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது நீதிபதிகள் கடந்தாண்டு தாங்கள் அளித்த தீர்ப்பை இறுதியானது என கூற முடியாது என்றனர்.