தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்கவேண்டும் என்று தொடர்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 67.47% ஆக இருந்தது. தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் தேர்தலில் வாக்களிப்பது குறித்து வாக்களர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. எனினும் 2014ஆம் ஆண்டு வாக்கு சதவிகிதத்தைவிட இம்முறை 1.03% தான் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்தது.
இந்நிலையில் தேர்தலில் தகுதியுடைய மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “இந்த மனு ஏற்றுகொள்ளும்படி இல்லை. ஏனென்றால் தேர்தல் சீர்திருத்தங்களில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.