வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்

வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்
Published on
வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்குவது சாத்தியமில்லை என்றும், தற்போதுள்ள தடுப்பூசி கொள்கையை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கு வீடு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “நாட்டின் மாறுபட்ட கொரோனா சூழ்நிலைகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை கருத்தில் கொண்டால், வீட்டுக்கு வீடு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை.
ஏற்கெனவே மக்கள்தொகையில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். இது நிர்வாகம் சாா்ந்த விஷயம். இதிலுள்ள சிரமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது மொத்த தேசத்துக்கும் பொதுவான உத்தரவைப் பிறப்பிப்பது நடைமுறை சாத்தியமற்றது. இதுதொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அது அரசின் தற்போதைய தடுப்பூசி திட்டக் கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. எனவே தற்போதுள்ள தடுப்பூசி கொள்கையை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. வீட்டுக்கு வீடு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் உத்தரவை பிறப்பிக்கத் தேவையில்லை'' என்றுகூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com