நோட்டாவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நோட்டாவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நோட்டாவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் முதல் முறையாக நோட்டா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அமித்ஷாவை வெற்றி பெ‌ற வைப்பதற்காக பாஜக இதனை அறிமுகம் செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் நோட்டாவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தது.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நோட்டா அறிமுகம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்ட நோட்டா முறைக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்றும், காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் மனு மீது பதிலளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com