”நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

”நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
”நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on

மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே குறித்த why I killed gandhi திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவின் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள் குறித்த திரைப்படமானது பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரும் கண்டனங்கள் எழுந்தது. அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் இந்த திரைப்படத்திற்கு தடை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது. 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், அது மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பொதுஅமைதியின்மையை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும், வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்தி, அவரைக் கொன்ற ஆர்எஸ்எஸைச் சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்தும் எனவே இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை நாடவும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com