தெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புகர் தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தும் எனவும், இந்த விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை வேறு எந்த நீதிமன்றமோ, அமைப்போ விசாரிக்க கூடாது என தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஹைதராபாத் அருகே, கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்றதாக கைது செய்யப்பட்ட 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com