"திருமண பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குக"-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

"திருமண பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குக"-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
"திருமண பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குக"-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Published on

திருமண பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குவது தொடர்பான மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகு மனைவியின் விருப்பமின்றி அவரை பாலியல் உறவுக்கு ஆளாக்குவது குறித்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ் நரசிம்ஹா மற்றும் ஜே.பி பார்திவாலா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்குமாறும் நிலுவையிலுள்ள அந்த வழக்குகளானது மார்ச் 21ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் குஷ்பூ சைஃபி என்ற பெண் திருமண பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின்மீது மே 11ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர் மற்றும் சி. ஹரி சங்கர் ஆகியோ அளித்த வெவ்வேறு தீர்ப்பால் இது தொடர்பாக மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷக்தேர் வழங்கிய தீர்ப்பில், மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு வைத்துக்கொள்வதை ஆதரிக்கும் இந்திய சட்டப்பிரிவு 375-ஐ ரத்து செய்யவேண்டும் என தீர்ப்பளித்தார். ஆனால், ஹரி சங்கர் வழங்கிய தீர்ப்பில், ”மனைவி மைனர் அல்லாத பட்சத்தில் அவரின் விருப்பமின்றி கணவர் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் வன்கொடுமையாக கருதமுடியாது என்கிறது; எனவே இது சட்டவிரோதமானது அல்ல” என்று தீர்ப்பளித்தார்.

அதேபோல், தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழங்கப்பட்ட கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஒரு நபர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த தீர்ப்பில், மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வது மற்றும் மனைவியிடம் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் குற்றச்சாட்டிலிருந்து விலக்கு அளிப்பது அரசியலமைப்பின் 14 (சட்டத்தின் முன் சமத்துவம்) பிரிவுக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புகளே தற்போது திருமணத்திற்கு பிறகான பாலியல் வன்கொடுமையை குறித்த மனுக்களை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த மனுக்களுக்கு தீர்ப்பளிக்க திருமணத்திற்கு பிறகான பாலியல் பலாத்காரத்தை குற்றமாக்குவது குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து தற்போது #MaritalRape என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com