”மாநில அரசுகளுக்குதான் தொழிலக ஆல்கஹால் கட்டுப்பாட்டில் அதிகாரம்” - உச்ச நீதிமன்ற தீர்ப்பு

தொழிலக பயன்பாட்டிற்கான ஆல்கஹால் தயாரிப்புக்கான சட்டங்களை கொண்டு வருவதற்கு மாநில அரசுகளுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்கூகுள்
Published on

தொழிலக பயன்பாட்டிற்கான ஆல்கஹால் தயாரிப்புக்கான சட்டங்களை கொண்டு வருவதற்கு மாநில அரசுகளுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

ஏற்கனவே இதே விவகாரத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஏழு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மனு மீது விசாரணை நடத்தப்பட்டு 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விற்கு பழக்கத்தின் விசாரணை மாற்றப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரச்சோடு மற்றும் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், அபய சோகா, நாகரத்னா, ஜே பி பருத்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல், புயல் சதீஷ், சந்திர சர்மா ,அகஸ்டின் ஜார்ஜ் ,மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவான விசாரணை நடத்திய நிலையில் இன்றைய தினம் தீர்ப்பானது வழங்கப்பட்டது

9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் எட்டு நீதிபதிகள் ஒருமித்த கருத்துடன் ஒரு தீர்ப்பும் அமர்வில் இருந்த நீதிபதி நாகரத்தின மாற்று தீர்ப்பும் வழங்கியுள்ளார். பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மாநில அரசுகளின் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

தொழிற்சாலை ஆல்காஹல் போதை தரும் மது என்பதால் அவற்றை முறைப்படுத்தி வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு, அரசியல் சாசனத்தின் எண்ட்ரி 8ல் லிஸ்ட் 2ல் இதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்திற்கான இதன் அதிகாரம் குறிப்பிட்ட தொழில்துறைக்கானது மட்டுமே எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
தவெக மாநாடு| அவசர சிகிச்சைக்காக 150 மருத்துவர்கள்.. பாதுகாப்புக்காக 10,000 ரசிகர்கள்!

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் காரணமாக மாநில அரசுகளின் பெரும் வருவாய் ஈட்டும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com