மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்தவருக்கு உச்சநீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மே மாதம் மாநிலங்களவை தேர்தலில் விஸ்வநாத் பிரதாப் சிங் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில், முன்மொழிபவர் பெயர் குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, அவரது மனுவை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதனை எதிர்த்து விஸ்வநாத் பிரதாப் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், தேர்தலில் போட்டியிடக் கூடிய உரிமை என்பது நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சில சட்டங்களின் வரையறைக்குள் வரக்கூடிய ஒன்று என்பதால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்தனர். மேலும், 4 வாரங்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயை மனுதாரர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.