ரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Published on

ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இத்துறையில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறி காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனையடுத்து பிரசாந்த் பூஷண், எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சமர்பித்தது. ஆனால் ரஃபேல் விலை தொடர்பான விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. இதற்கிடையே, இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையிக் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.40 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில்  ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என தெரிவித்துள்ளது. மேலும்  ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது என யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். வழக்கு குறித்து தீர்ப்பு சொன்ன தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சட்ட ஆய்வு ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபடும்; சில விஷயங்களுக்காக இதில் தலையிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com