அயோத்தி வழக்கு தீர்ப்பை சீராய்வு செய்யுமாறு கோரி தொடரப்பட்ட 18 மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சீராய்வு கோரும் மனுக்களை பரிசீலித்தது. இதன் பின், தீர்ப்பை சீராய்வு செய்வதற்கான முகாந்திரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இதற்கு பதில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்த தீர்ப்பில் சில அம்சங்கள் குறைபாடுள்ளதாகவும் எனவே அதை சீராய்வு செய்ய வேண்டும் எனக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.