நீதிபதி பாப்டே குழுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திக்கவில்லை !

நீதிபதி பாப்டே குழுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திக்கவில்லை !
நீதிபதி பாப்டே குழுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திக்கவில்லை !
Published on

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவை 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனத் தகவல் வெளியானது. 

இதனிடையே, இந்தக் குழுவின் விசாரணைக்கு ஆஜராக போவதில்லை என புகார் அளித்த பெண் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரிமான் மற்றும் சந்திரசூட் ஆகியோர் நீதிபதி பாப்டே குழுவை சந்தித்து, “புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரிப்பது தவறான முறை” எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இந்த 2 நீதிபதிகள் பாப்டே தலைமையிலான விசாரணை குழுவை சந்திக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நீதிபதிகள் நரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் பாப்டே தலைமையிலான விசாரணைக் குழுவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால் பாப்டே தலைமையிலான விசாரணை குழுவை எந்த நீதிபதியும் சந்திக்கவில்லை. அந்த குழு தனது விசாரணையை யாருடைய தலையீடும் இன்றி செய்துவருகிறது”  எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com