`ஜிஎஸ்டியில் சட்டம் இயற்ற மத்திய, மாநிலங்களுக்கு சம அதிகாரம் உள்ளது'-உச்சநீதிமன்றம் அதிரடி

`ஜிஎஸ்டியில் சட்டம் இயற்ற மத்திய, மாநிலங்களுக்கு சம அதிகாரம் உள்ளது'-உச்சநீதிமன்றம் அதிரடி
`ஜிஎஸ்டியில் சட்டம் இயற்ற மத்திய, மாநிலங்களுக்கு சம அதிகாரம் உள்ளது'-உச்சநீதிமன்றம் அதிரடி
Published on

`ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது’ என்றும் `ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மாநில சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு சம உரிமை உள்ளது’ என உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரச்சூடு தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் படி `வரிவிதிப்பில் மாநில மற்றும் மத்திய அரசிற்கு பிரத்தியேக அதிகாரங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டவை ஆகும். அரசியல் சாசன பிரிவு 246A படி வரி விதிப்பு விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களில் சம அளவு அதிகாரம் உள்ளது.

அதே போல 279 வது பிரிவு மத்திய மாநில அரசுகளுக்கு கான ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்களிக்கும் கட்டமைப்பு என்பது 1/3 என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசுக்கும் 2/3 விகிதாச்சாரம் மாநில அரசுகளுக்கும் உள்ளது ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் போட்டிகளுக்கான இடமாகவும் மாறி உள்ளது இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கிறது.

ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் குழப்பத்தை தவிர்ப்பதற்காகத்தான் கூட்டாட்சித் தத்துவத்தின் ஒன்றிய அரசருக்கு சற்று அதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்தியக் கூட்டாட்சி என்பது மாநிலமும் மைய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக்கடிய இடமாகும். எனவே இதனடிப்படையில் பார்த்தால் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சம உரிமை உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com