“ 'பாலியல் விழிப்புணர்வு கல்வி'யின் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்” - உச்ச நீதிமன்றம்

பாலியல் விழிப்புணர்வு கல்வியின் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்எக்ஸ் தளம்
Published on

‘குழந்தைகள் தொடர்புள்ள பாலியல் ஆபாச படங்கள்’ குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் சிலவற்றை தெரிவித்தது. அவை இங்கே...:

‘பாலியல் விழிப்புணர்வு கல்வி’ என்றாலே ஏதோ மேற்கத்திய கலாசாரத்துடன் தொடர்புடையது என்றும் நமது கலாசாரத்திற்கு தொடர்பில்லாதது என்றும் தவறான கருத்தாக்கம் மக்கள் மனதில் பதிந்து கிடக்கிறது.

sex education
sex educationfreepik

இதுவே பாலியல் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிப்பதில் தடைக்கற்களாக உள்ளன. இன்றைய சூழலில் பாலியல் விழிப்புணர்வு கல்வியின் அவசியம் அதிகரிக்கிறது. இதன் மூலம் பாலியல் சுகாதார பாதிப்புகள் குறைவதுடன் பாலியல் குற்றங்களும் குறையும்.

உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் கேரள மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை! நடந்தது என்ன?

நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், பாலியல் விழிப்புணர்வு கல்வியின் அவசியமும் அதிகரித்துள்ளது. பாலியல் விழிப்புணர்வு கல்வியை இளமையிலேயே கற்பது பல்வேறு பலன்களை அளிப்பது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com