அயோத்தி வழக்கு: சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கு: சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தி வழக்கு: சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

அயோத்தி வழக்கில், வரும் 18 ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமை கோரும் வழக்கில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 8ஆம் தேதி நியமித்தது. வாழும்‌ கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் அந்தக் குழுவில் இடம் பெற் றனர். 

இந்நிலையில், அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான, கோபால்சிங் விஷாரத் என்பவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமர சக் குழு அமைக்கப்பட்டும் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இந்த  வழக்கை, உடனடியாக விசாரி த்து தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், சமரசக் குழுவினர் வரும் 18 ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com